தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவை புறக்கணித்தேன்…!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவை புறக்கணித்ததாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று ராணுவ கண்காட்சியை தொடங்கி வைக்க தமிழகத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்ட திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயுத்தமாகி இருந்தன.
இதனிடையே, இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. மேலும் அவர் பங்கேற்ற விழாவில் தமிழக முதல்வர், துணை முதல்வர் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்நிலையில், புதுச்சேரி முதல்வருக்கு அழைப்பு இருந்தும் அவர் செல்லாத்து குறித்து கேள்வி எழுப்பபட்டது.
அப்போது புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்களின் எதிர்ப்பை உணர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கியதாகக் கூறி பா.ஜ.க.வினர் உண்ணாவிரதம் இருப்பது மிகப்பெரிய நாடகம் என்று விமர்சித்தார் அவர், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவை புறக்கணித்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.