தமிழக வரலாற்றுத் தலைவர்களின் பாடங்களை நீக்குவது வேதனைக்குரியது!சீமான்
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,நீட் தேர்வு போன்ற பொதுத் தேர்வுகளில் மத்திய அரசு பாடத்திட்டத்திலிருந்து வினாக்கள் கேட்பது, அந்தப் பாடத்திட்டத்தில் கல்வி பயில பிற மொழி மாணவர்களை இழுப்பது திட்டமிட்ட சதி.தமிழ் வரலாறு இதனால் அழியும் என நினைக்கிறார்கள் .
எங்களது வேலுநாச்சியார் பற்றி படிப்பதை விட்டு ஜான்சிராணிப் பற்றிப் படிக்கச் சொல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார் . வ.உ.சியைப் பற்றி படிப்பதை விட்டு வல்லபாய் படேல் பற்றி படிக்கச் சொல்ல முயல்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.தமிழக ஆட்சியாளர்கள் இங்கே தமிழ்நாடு பாடத்திட்டத்தில் தமிழக வரலாற்றுத் தலைவர்களின் பாடங்களை நீக்குவது வேதனைக்குரியது என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.