தமிழக முதல்வர் மீண்டும் வருவார்…அமைச்சர் காமராஜ் நம்பிக்கை…!!
கஜா புயல் பாதிப்பால் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இன்று பாதிக்கப்பட்ட பகுதிகளை கேட்டறிந்து மக்களை நேரில் சந்தித்தார்.தொடர்ந்து மோசமான வானிலை சூழலால் தமிழக முதல்வர் தனது பயணத்தை ரத்து செய்தற்.இந்நிலையில் திருவாரூரில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுத்துறை அமைச்சர் காமராஜ், 30 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்கினார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் திருவாரூர் வருவார் என்று கூறினார்.
dinasuvadu.com