தமிழக மாணவர்கள் தவறான கேள்வி கேட்கப்பட்டாலும் சரியான விடை அளிக்கும் அளவுக்கு முன்னேறியிருப்பதாக கமலஹாசன் பாராட்டு!
மக்கள் நீதிமய்யம் தலைவர் கமலஹாசன்,கேள்வித் தாள்களில் தவறான கேள்வி கேட்கப்பட்டாலும் சரியான விடை அளிக்கும் அளவுக்கு தமிழக மாணவர்கள் முன்னேறியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் திறந்த வாகனம் மூலம் பல்வேறு இடங்களில் கமலஹாசன் மக்களை சந்தித்து வருகிறார். கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அஞ்சலி செலுத்தியபின் பயணத்தைத் தொடங்கிய அவர், கன்னியாகுமரி ரயில்வே சந்திப்பு, தென் தாமரைக் குளம், பணக்குடி உள்ளிட்ட இடங்களில் மக்களை சந்தித்தார்.
மக்களிடம் தனது பலத்தை நிருபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஏற்கனவே தனது பலத்தை திரைப்படங்களிள் நடிப்பு மூலம் நிரூபித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிளஸ்டூ தேர்வில் 91 புள்ளி 1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
இறுதியில் நாகர்கோவிலில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொதுக்கூட்டத்துக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.