தமிழக மத்தியச் சிறைகளில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய 73 பேரில், 4 பெண்கள் உட்பட 62 கைதிகள் தேர்ச்சி..!
தமிழக மத்தியச் சிறைகளில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய 73 பேரில், 4 பெண்கள் உட்பட 62 கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை மத்தியச் சிறையில் உள்ள தமிழழகன் என்பவர் 1050 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வேலூர் சிறைக் கைதியான பால்ராஜூ1022 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னை புழல் சிறையில் உள்ள கூழை இப்ராஹீம் 1005 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
புழல், சேலம், கடலூர் மத்திய சிறைகளில் தேர்வெழுதிய அனைத்துக் கைதிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர். கோவை, பாளையங்கோட்டை, மதுரை, திருச்சி, வேலூர் சிறைகளிலும், வேலூர் பெண்கள் சிறையிலும் ப்ளஸ் டூ தேர்வை எழுதிய பெரும்பாலான கைதிகள் தேர்ச்சி அடைந்துள்ளன