தமிழக மக்கள், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகளில் செல்ல வேண்டும்!
மேதா பட்கர் மற்றும் குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி, சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள அம்பேத்கர் மணிபண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இதில் பேசிய மேதா பட்கர், நகர மயமாக்கல் மற்றும் தொழில் முதலீடுகளால், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கப்படாமல், வஞ்சிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய ஜிக்னேஷ் மேவானி, மக்கள் இயக்கங்களுக்கு, மோடி அரசால் ஆபத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
தமிழக மக்கள், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கொள்கைகளில் செல்ல வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார். முன்னதாக இருவரும், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை வாழ் மக்களை சந்தித்தனர். அதைத்தொடர்ந்து ஆளுநரை சந்தித்து, நகர்புறத்தில் உள்ள குடிசைவாழ் மக்களை மட்டும் வெளியேற்றுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, மனு அளித்தனர்.