தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை !
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்தடைந்தார். அமித் ஷாவை தமிழக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர ராவ்,மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகின்றார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.