தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மாற்றம்? பாஜக தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ் விளக்கம்
தமிழக பாஜக தலைவரை மாற்றவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது குறித்து தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆவார்.இந்நிலையில் இவர் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றது.அதுபோல தற்போது ஒரு வதந்தி தமிழிசையை பற்றி பரவி வருகின்றது.அதாவது தமிழக பாஜக தலைவர் தமிழிசையை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா மாற்றவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தது.
இந்நிலையில் தற்போது தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவரை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா மாற்றவுள்ளதாக சில ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற செய்தி, உண்மைக்கு புறம்பானது என்று தமிழக பாஜக பொறுப்பாளர் முரளிதர ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The news appearing in a section of media that there would be a change in the Tamil Nadu BJP President following my report to Sri Amit Shah is absolutely baseless, far from truth and mischievous.
— P Muralidhar Rao (Modi Ka Parivar) (@PMuralidharRao) June 29, 2018