தமிழக பதிவெண் கொண்ட படகு சென்னையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் தத்தளிப்பு!
இந்திய கடலோர காவல் படையினர் படகு பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்த 9 தமிழக மீனவர்களை மீட்டனர். 9 மீனவர்களுடன் சென்ற தமிழக பதிவெண் கொண்ட படகு ஒன்று சென்னை கடற்கரையில் இருந்து 98 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எஞ்சின் அறையில் பழுது ஏற்பட்டு கடல் நீர் உள்ளே புகுந்தது. நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள் அவசர உதவி வேண்டி கடலோர காவல் படைக்கு சிக்னல் அனுப்பினர்.
இதை அடுத்து படகில் இருப்பவர்களை மீட்பதற்காக கடலோர காவல் படை கப்பல் விரைந்தது. 2 மணி நேரத்திற்குப் பின்னர் மூழ்கி கொண்டிருக்கும் படகின் இருப்பிடத்திற்கு சென்றடைந்த கடலோர காவல் படை கப்பலானது, படகில் இருந்த தமிழக மீனவர்களை மீட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.