தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே தொடங்கியது!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் பல்வேறு பரபரப்பான சூழல்களுக்கு இடையே இன்று தொடங்கியது.
தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 19ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. ஜூலை 9ம் தேதி வரை, மொத்தம் 23 நாட்கள் இந்தக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்குப் பின் சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
காவிரி விவகாரம், ஸ்டெர்லைட், குரங்கணி தீவிபத்து, அரசு ஊழியர்கள் போராட்டம், நீட் தேர்வு, குட்கா விவகாரம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால், இந்தக் கூட்டத் தொடர் முழுவதுமே அனல் பறக்கும் எனத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.