தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் : உயர்நீதிமன்றம்

Published by
Dinasuvadu desk

தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பாலி தீர்த்தம் அருகே அருணாச்சலேஸ்வரர் கோவிலின் துணை கோவிலான அருள்மிகு பக்த மார்கண்டேயர் கோவிலில் சிலைகளை அகற்றி, ஆக்கிரமித்ததாக வெங்கடேசன், ரமேஷ் உள்ளிட்ட 9 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து கோவிலை ஆக்கிரமித்தவர்களை உடனடியாக கைது செய்யவும், இதுகுறித்து திருவண்ணாமலை டிஎஸ்பி நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், தமிழக கோவில்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

கடைசி டெஸ்ட் முடிந்த பிறகு ஓய்வா? மனம் திறந்த ரோஹித் சர்மா!

சிட்னி : இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் சமீபத்திய டெஸ்ட் பார்ம் மோசமாக இருப்பதால் அவர் மீது கடுமையான விமர்சனங்கள்…

19 minutes ago

தமிழ்நாட்டில் போராட்டங்கள் மறுக்கப்படுகிறதா? கே.பாலகிருஷ்ணின் விமர்சனமும்.. சேகர்பாபுவின் விளக்கமும்…

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நேற்று விழுப்புரம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள தனியார்…

31 minutes ago

விருதுநகர் : பட்டாசு ஆலை வெடி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே தனியார் பட்டாசு வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

1 hour ago

“சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது” மத கஜ ராஜா குறித்து விஷால்!

சென்னை : பொங்கல் போட்டியில் இருந்து விடாமுயற்சி படம் வெளியேறியதில் இருந்து அடுத்ததாக பொங்கல் ரிலீஸ்க்கு நிறைய படங்கள் போட்டிக்கு வந்து…

2 hours ago

அண்ணாமலை இல்லை, ஆண்டவனே நினைத்தாலும் தாமரை மலராது! – கே.பாலகிருஷ்ணன்

சென்னை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றது. விழுப்புரம்-சென்னை சாலையிலுள்ள தனியாா்…

2 hours ago

Live : 2025-ன் முதல் ஜல்லிக்கட்டு முதல்… பல்வேறு அரசியல் நிகழ்வுகள் வரை…

சென்னை : புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. பல்வேறு மாவட்டங்களில்…

3 hours ago