திமுக சார்பில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை மத்திய அரசு திரும்பப் பெறக்கோரி, ஆளுநர் மாளிகை அருகே போராட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் இருந்து புறப்பட்ட தி.மு.க.வினர், ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவதற்காக பேரணியாகச் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆளுநருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்
ஆளுநர் மாநில சுய உரிமையில் தலையிடுவதாகவும், பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் பெயரும் கூறப்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். போராட்டத்தையடுத்து 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் தலைமையிலான போராட்டத்தில் வாகை.சந்திரசேகர் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கைதாகினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.