தமிழக அரசு நீலகிரி மாவட்ட ஆட்சியரை மாற்றக்கூடாது..!தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை..!!!
உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் எச்சரித்து உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து விடுதிகள் கட்டப்பட்டு இருந்தது.இதனை அகற்ற உச்சநீதிமன்ற மாவட்ட ஆட்சியருக்கு உத்தர்விட்டிருந்தது.இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் அம்மாவட்ட ஆட்சியர் களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக விரிவான விசாரணையை வரும் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தனர். ஆனால் நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்ற பணிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மேற்கொண்டு வருகிறார் இந்த பணியில் உச்சநீதிமன்றத்தின் மறு உத்தரவு வரும் வரை அவர் இடமாற்றம் செய்யக் கூடாது என்று தமிழக அரசுக்கு எச்சரித்து உத்தரவிட்டனர்.