தமிழக அரசு நிர்வாகம் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு ஒப்புதல்…!
தமிழக அரசு அத்திக்கடவு – அவிநாசி கூட்டுக்குடீநீர் திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் முதல் கட்டமாக 1,652 கோடி ரூபாய் நிதியை செலவிட ஒப்புதல் வழங்கியுள்ளது.
திட்டத்தை செயல்படுத்தும் வகையில் குழாய் , மின் இணைப்பு, பம்பிங் முதலியவற்றை அமைத்தல் மற்றும் 5 ஆண்டுகளுக்கு தொடர் பராமரிப்புகளை மேற்கொள்வதற்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் வெள்ள நீரை, கோவை, திருப்பூர், மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விட்டு நீர்நிலைகளை வளம்பெறச் செய்வது அத்திக்கடவு அவிநாசி கூட்டுகுடிநீர் திட்டத்தின் நோக்கமாகும்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.