தமிழக அரசு தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் கருத்துக்கு தமது பதில் மனுவில் பதிலைத் தெரிவிக்கும்! அமைச்சர் ஜெயக்குமார்
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர்களுடைய கருத்தை நீதிபதிகள் தெரிவித்துள்ளதாகவும், பதில் மனுவில் அரசு தனது பதிலைத் தெரிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையமே போதுமானது என்பது தான் தங்கள் நிலை என்றார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினால் தான் தமிழகத்திற்கு பெரிய ஆபத்து என்றும், அவர்கள் ஆட்சி காலத்தில் நிலம் கூட வாங்க முடியாது என்றும் குறிப்பிட்ட அவர், இன்று முழு சுதந்திரத்தை ஆளும் அரசு வழங்கிவருவதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.