தமிழக அரசு தென்மண்டல ஐஜி ஷைலேஷ்குமார் யாதவ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு காவல்துறை உயர் அதிகாரிகள் 9 பேரை பணியிடமாற்றம் செய்தும் 2 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் உத்தரவிட்டுள்ளது.
காத்திருப்பு பட்டியலில் இருந்த மனோகரனுக்கு திருப்பூர் நகர காவல் ஆணையராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர ஆணையராக இருந்த நாகராஜன், சென்னை பயிற்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
டிஐஜி பாஸ்கரனுக்கு காவல்துறை செயலாக்கப்பிரிவு ஐஜியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மதுரை தென்மண்டல ஐஜியாக இருந்த ஷைலேஷ்குமார் யாதவ், சென்னை ஆயுதப்படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சண்முக ராஜேஷ்வரன் மதுரை தென்மண்டல ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரைமாநகர காவல் ஆணையராக டேவிட்சன் வோசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக மகேந்தர் குமார் ரத்தோட் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை குற்றப்பிரிவு ஐஜி பாஸ்கரன், தமிழக காவலர் பயிற்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தன் தாய்க்கு முறையாகச் சிகிச்சை…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய…
சென்னை : சென்னையில் தொழிலதிபர் மார்ட்டின் மற்றும் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களில் ED அதிகாரிகள்…
சென்னை : வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் எதிரொலியாக, மருத்துவமனைகளில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கிண்டி அரசு மருத்துவமனையில்…