தமிழக அரசு கட்டிட கட்டுமானத்துறைக்கு தரக்கட்டுப்பாட்டு பிரிவு உருவாக்கி அரசாணை!
தமிழக அரசு பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள கட்டிட கட்டுமானத்துறைக்கு “தரக்கட்டுப்பாட்டு பிரிவு ” உருவாக்கி அரசாணை வெளியிட்டுள்ளது .
இதன்படி, தமிழகத்தில் உள்ள மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை ,திருச்சி, மதுரை என மூன்று மண்டலங்களாக உருவாக்கப்பட்டுள்ளது . ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு செயற்பொறியாளர் தலைமையில் 90 அதிகாரிகள் வரை கட்டிட தரங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடவுள்ளார்கள்.
குறிப்பாக டெண்டர் மூலம் கட்டப்படும் கட்டிடங்களை இந்த குழுவினர் ஆய்வு செய்து தரமாக உள்ளது என ஒப்புதல் வழங்கினால் மட்டுமே ஒப்பந்த தொகையானது விடுவிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது . பொதுப்பணித்துறை துவங்கி 150 வருடத்திற்கு பின் முதன்முறையாக கட்டிடகட்டுமானத்துறைக்கு “தரக்கட்டுப்பாட்டு பிரிவு” அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.