தமிழக அரசு உறுதி !10 நாட்களில் சீர்செய்யப்படும் …
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு ஆன்லைன் பத்திர பதிவில் உள்ள பிரச்சினைகள் இன்னும் 10 நாட்களில் சரி செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
ஆன்லைன் பத்திரப்பதிவில் நிலவி வரும் குளறுபடிகள் தொடர்பாக, சிவகாசியைச் சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர்
தாக்கல் செய்திருந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல் ஆன்லைன் பத்திரப்பதிவு முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் முறையில் உடனடியாக பத்திரப் பதிவை மேற்கொள்ள முடியவில்லை என மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது. ஆன்லைன் பத்திரப்பதிவின் போது, 3 நாட்கள் பதிலுக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதனால் சாதாரண மக்கள், வங்கியில் கடன் வாங்கியவர்கள் போன்றோர் பத்திரம் பதிய முடியாமல் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், ஆன்லைன் பத்திரப்பதிவில் உள்ள குறைகளை களைவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் பத்திரப் பதிவில் உள்ள குறைகள் 10 நாட்களில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 13ஆம் தேதி ஒத்துவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.