தமிழக அரசியலில் பரபரப்பு …!அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் மு.க.அழகிரி ஆதரவாளர்களுடன் திடீர் சந்திப்பு…!காரணம் இதுவா …!

Default Image

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி  கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி  திமுகவின்  தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

Image result for mk alagiri mk stalin

இதேபோல் கருணாநிதியின் மூத்த மகனும் தனக்கு கட்சியில் இடம் வேண்டும் நீண்ட நநாட்களாக போராடி வந்தார்.பின்னர் சென்னையில் மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கருணாநிதி சமாதியை நோக்கி அமைதி பேரணி நடத்தினர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி பேரணி ஒரு வழியாக முடிந்தது.ஆனால் முக.அழகிரி முக்கிய அறிவிப்பு எதையும் வெளியிடாதது பெரும் பரபரப்பை உண்டாக்கியது.பெரிய எதிர்பார்ப்புடன் நடந்த பேரணியின் முடிவில் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. அதாவது அழகிரி தனது அரசியல் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.இல்லையென்றால் திமுக குறித்தும் ,முக ஸ்டாலின் குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பாசர்க்கப்பட்டது.ஆனால் முக.அழகிரி எதையுமே பேசாதது ஒரு பரபரப்பாக இருந்தது.

இதன் பின்னர் சமீபத்தில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜூ அழகிரி குறித்து கருத்து ஒன்றை தெரிவித்தார்.அவர் கூறுகையில், பல வருடங்களாக பதவியில் இல்லாமல் இருந்தாலும், மிகப்பெரிய கூட்டத்தை அழகிரி கூட்டியுள்ளார்.மு.க.அழகிரி பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான தொண்டர்களை திரட்டி உள்ளார். ஆனால் இடைத்தேர்தல் வரும் போது அழகிரிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் மு.க.அழகிரிக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டும்  தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது மதுரையில்  முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி  அமைச்சர் செல்லூர் ராஜூவின் தாயார் மரணமடைந்தார்.திடீரென்று  மு.க.அழகிரி  தனது ஆதரவாளர்களுடன் அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டிற்கு சென்று அவரது  தாயார் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு மு.க.அழகிரி  ஆறுதல் கூறினார்.

இதன் பின்னர் வெளியே வந்த அழகிரி செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து சென்று விட்டார்.இந்த சந்திப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருணாநிதி மறைவிற்கு பிறகு சமீப காலமாக அமைச்சர் செல்லூர் ராஜு மு.க.அழகிரிக்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்