தமிழக அரசியலில் உள்ள வெற்றிடத்தில் மரக்கன்றுகளை நடுவேன்!
நடிகர் விவேக் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக தமக்கு தெரியவந்தால், அந்த வெற்றிடத்தில் மரக்கன்றுகளை நடுவேன் என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.
உலக வன நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவில் நகைச்சுவை நடிகர் விவேக் கலந்துகொண்டார். தனியார் பள்ளியில் நடைபெற்ற விழாவில் மாணவர்களுடன் உரையாடிய விவேக், பின்னர் மரக்கன்றுகளை நட்டார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக இளைஞர்கள் வார விடுமுறை நாட்களில் மரக்கன்று நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், பிளாஸ்டிக் அகற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டுமென வலியுறுத்தினார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு கருத்து கூற மறுத்த விவேக், வெற்றிடம் இருப்பதாக தமக்கு தெரியவந்தால் அங்கு மரக்கன்றுகளை நடுவேன் என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.