தமிழக அரசின் நிலைப்பாடும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்…!
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் தமிழக அரசின் நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
இன்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர், “ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்திலே ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என அரசு நடவடிக்கை எடுத்தது. ஜெயலலிதா எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் அரசுக்கு இல்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் அரசின் நிலைப்பாடு. மேலும் ஸ்டெர்லைட் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் விவரம் தெரியாமல் தமிழக அரசு அமைதி காப்பதாக ரஜினி பேசக்கூடாது. தமிழக அரசின் அறிக்கையை முழுமையாக படித்துவிட்டு அவர் பதில் சொல்லட்டும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துவது ஏற்கத்தக்கதல்ல. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு மூன்று மாதம் அவகாசம் கேட்பதை தமிழக அரசு ஏற்காது.
மெரினாவில் போராட்டம் நடத்தக்கூடாது என நாங்கள் தடை எதுவும் விதிக்கவில்லை. உயர்நீதிமன்றம் தான் அவ்வாறு கூறியுள்ளது. அரசியல் லாபத்துக்காக தி.மு.க எதை வேண்டுமானாலும் சொல்லலாம். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் தமிழக அரசுக்கு இல்லை” என்றார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.