தமிழக அரசிடமிருந்து ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு நோட்டீஸ்…!
தமிழகத்தில் நிஸான் கார் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வரிச்சலுகை, ஊக்கத்தொகை தருவதாக உறுதி அளித்தபடி தமிழகஅரசு தராததால், ரூ.5000 கோடி இழப்பீடு கேட்டு நிசான் கார் நிறுவனம் பிரதமருக்கு தமிழக அரசின் மீதான புகார் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.மேலும் நிஸான் நிறுவனம் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையானது தொடர்ந்து நீடித்து கொண்டே இருந்தால் தமிழக தொழில்துறை சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது என எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.