தமிழக அரசு அறிவித்த 2.44 சதவீத சம்பள உயர்வை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், 2.57 சதவீத ஊதிய உயர்வை கோரியுள்ளனர். மேலும், நிலுவைத் தொகை 7,000 கோடி ரூபாயை வழங்கக்கோரி, கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசு உடனடியாக போராட்டத்தை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு பிரச்னையை தீர்க்காத வரை, வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும், என போக்குவரத்து தொழிற்சங்கங்கள், திட்டவட்டமாக அறிவித்துள்ளன. சென்னையில் நேற்று மாலை 17 தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com
சென்னை : காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம்…
சென்னை : கேரளா உட்பட 10 மாநிலங்களில் ஒரு மக்களவை (வயநாடு) மற்றும் 31 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல்…
சென்னை : கடந்த வாரம் உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது கடந்த சில நாள்களாகவே குறைந்து வருகிறது. அதன்படி,…
செஞ்சுரியன் : இந்தியா அணி தென்னாபிரிக்காவில் மேற்கொண்டு வரும் சுற்றுப் பயணத்தின் டி20 தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன்…
சென்னை : காற்றழுத்த தாழ்வு பகுதி வட தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நீடிக்கிறது.…
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…