தமிழகம் முழுவதும் 4வது நாளை எட்டிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்!

தமிழக அரசு அறிவித்த 2.44  சதவீத சம்பள உயர்வை ஏற்க மறுத்த போக்குவரத்து தொழிற்சங்கத்தினர், 2.57 சதவீத ஊதிய உயர்வை கோரியுள்ளனர். மேலும், நிலுவைத் தொகை 7,000 கோடி ரூபாயை வழங்கக்கோரி, கடந்த வியாழக்கிழமை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள் என பல்வேறு தரப்பினரும், சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலைநிறுத்தம் இன்று 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், அரசு உடனடியாக போராட்டத்தை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊதிய உயர்வு பிரச்னையை தீர்க்காத வரை, வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும், என போக்குவரத்து தொழிற்சங்கங்கள், திட்டவட்டமாக அறிவித்துள்ளன. சென்னையில் நேற்று மாலை 17 தொழிற்சங்கங்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் நாளை கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்