தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்!

Published by
Venu

நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்  காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு, காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு போதிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதற்காக பல முறை, பொதுக்கூட்டம், போராட்டம் என தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை இரவு முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

விரைவில் த.வெ.க மாவட்ட செயலாளர்களை தனித் தனியாக சந்திக்கிறார் விஜய்!

சென்னை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கட்சி மற்றும் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு…

10 minutes ago

90 மணி நேரம் வேலை: சர்சை கருத்தை கூறிய L&T நிறுவனர்… நடிகை தீபிகா படுகோன் எதிர்ப்பு!

டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…

47 minutes ago

பெண்ணை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை! சட்டத்திருத்தத்தை அறிமுகம் செய்தார் முதலமைச்சர்!

சென்னை :  சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…

53 minutes ago

ஷங்கரின் கேம் சேஞ்சரா? இல்லை கேம் ஓவரா? டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…

2 hours ago

தொடர்ந்து உயரும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு எவ்வளவு?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…

2 hours ago

யார் அந்த சார்? ‘இவர் தான் அந்த சார்’ என சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் கோஷம்.!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…

2 hours ago