தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்கிறது பழமொழி தை முதல் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் சிறப்பு பொங்கல் வைத்து சூரிய பகவனை வணங்கி வழிபடுவது வழக்கம். அதே போல் ஜல்லிக்கட்டும் நடைபெறும் இந்தாண்டு வெகுச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.இரண்டாம் நாள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் இன்று தமிழமெங்கும் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வண்ணங்களைத் தீட்டி, பொங்கல் படையலிட்டு மரியாதை செலுத்தினர். அவற்றுடன் தங்களது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தியினர் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை ஒருவருக்கெருவர் பரிமாறிக் கொண்டனர். இவற்றுடன் அந்தந்த ஊர்களில் இருக்கும் கோவில் காளைகளுக்கும் மற்றும் கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
இவ்வாறு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.அனைத்து கோவில்களிலும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டது.நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வெகுச்சிறப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.
அதன் படி 700 காளைகளும் 936 மாடு பிடிவீரர்களும் மட்டுகட்டி வருகின்றனர்.போட்டியின் இறுதியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்பு பரிசு மற்றும் பிடிபடாத மாடுகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
— தினச்சுவடு சார்பாக அனைத்து உறவுகளுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —-
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…