தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலகல கொண்டாட்டம்…!

Default Image
  • தமிழகம் முழுவதும் மாட்டுப்பொங்கல் கோலகலமாக களைக்கட்டியது
  • வாழ்நாள் முழுவதும் உழைக்கும் தன் வீட்டு செல்வத்திற்கு சிறப்பான வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

தைப் பிறந்தால் வழிபிறக்கும் என்கிறது பழமொழி தை முதல் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் சிறப்பு பொங்கல் வைத்து சூரிய பகவனை வணங்கி  வழிபடுவது வழக்கம். அதே போல் ஜல்லிக்கட்டும் நடைபெறும் இந்தாண்டு வெகுச்சிறப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.இரண்டாம் நாள் தங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

Related image

இந்நிலையில் இன்று தமிழமெங்கும் உள்ள மக்கள் தங்கள் வீட்டில் வளர்க்கும் மாடுகளை குளிப்பாட்டி சுத்தப்படுத்தி கொம்புகளுக்கு வண்ணங்களைத் தீட்டி, பொங்கல் படையலிட்டு மரியாதை செலுத்தினர். அவற்றுடன் தங்களது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தியினர் என அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை ஒருவருக்கெருவர் பரிமாறிக் கொண்டனர். இவற்றுடன் அந்தந்த ஊர்களில் இருக்கும் கோவில் காளைகளுக்கும் மற்றும் கோ சாலைகளிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

Related image

இவ்வாறு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.அனைத்து கோவில்களிலும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஆராதனை காண்பிக்கப்பட்டது.நேற்று அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு வெகுச்சிறப்பாக நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

 

Related image

அதன் படி 700 காளைகளும் 936 மாடு பிடிவீரர்களும் மட்டுகட்டி வருகின்றனர்.போட்டியின் இறுதியில் சிறந்த மாடுபிடி வீரருக்கு சிறப்பு பரிசு மற்றும் பிடிபடாத மாடுகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

தினச்சுவடு சார்பாக அனைத்து உறவுகளுக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —-

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்