ராணுவக் கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைக்க பிரதமர் மோடி டெல்லியிலிருந்து தனிவிமானம் மூலம் சென்னைக்கு வந்தடைந்தார்.
இந்நிலையில் காவிரி வாரியம் அமைக்காத பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவர் கருணாநிதியின் வீட்டிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது..
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி பகுதிகளில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவில் பகுதிகளில் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புகொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரித்து விருதுநகர், சிவகாசி பகுதிகளில் உள்ள திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் கருப்புக்கொடி போராட்டத்தில் பங்கேற்க உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீட்டில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. பிரதமர் மோடி தமிழகம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, திருவெறும்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர், நாகை, திருவாரூரில் உள்ள வீடுகள், பேருந்து நிலையம், அலுவலகங்களில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திருச்சி திருவெறும்பூர் பர்மா காலனியில் உள்ள வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வருகையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசு உட்பட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.பிரதமருக்கு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர் . விமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…