தமிழகம் முழுவதும் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடைபெற்றன.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிடு சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகளும் கனி காணும் நிகழ்சியு நடைபெற்றன. பல்லயாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளிபடுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் இந்த அபூர்வ நிகழ்வையும், சிறப்பு வழிபாடுகளையும் பக்தர்கள் தரிசித்தனர்.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகருக்கு வைர கிரீடம் மற்றும் தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவை புலியகுளத்தில் ஆசியாவிலேயே பெரிய விநாயகரான முந்தி விநாயகருக்கு 2 டன் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவை காந்திபுரத்தை அடுத்த காட்டூர் மாரியம்மன் கோவிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. 2 ஆயிரம் ரூபாய், 500 ரூபாய் உள்ளிட்ட ரூபாய் நோட்டுகள் பல வண்ணங்களில் உள்ளதால் ரூபாய் நோட்டு அலங்காரம் வண்ணமயமாக உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்காண பக்தர்கள் பால்காவடி எடுத்து வழிபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம், திருவட்டார், குமாரகோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மக்கள் அதிகாலையில் நீராடி கோலமிட்டு, புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று வழிபட்டனர். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, நகைகள், நெல் முதலான மங்கலப் பொருட்கள் வைத்து இறைவனை வழிபட்டனர்
நாமக்கல்லில் பிரசித்தி பெற்ற 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமன்றி வெளிமாநில பக்தர்களும் ஆஞ்சநேயரை தரிசித்துச் சென்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…