தமிழகம்-புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு..!!வானிலை மையம்..!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிவந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியில் நிலவுகிறது.
மேலும் மாலத்தீவு மற்றும் குமரிக் கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சிவகங்கையில் 9 செமீ, திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் 5 செமீ, திண்டுக்கல் மாவட்டம் சத்திரபட்டியில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி அதிகபட்சமாக திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்