கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி 3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன்
தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ்.கர்ணன், சக நீதிபதிகள் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது அவதூறு புகார்கள் தெரிவித்ததாகக் கூறி, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாமாக முன்வந்து தொடர்ந்தது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்காததால், அவரைக் கைது செய்யும்படி உச்ச நீதிமன்ற 7 நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு, கொல்கத்தா போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இதனிடையே நீதிபதி கர்ணனுக்கு 62 வயது பூர்த்தியானதால், அவரது பதவிக்காலம் முடிவடைந்தது. தலைமறைவு நிலையிலேயே அவர் ஓய்வுபெற்றார்.
அவரைப் பிடிக்க கொல்கத்தா போலீஸார் தமிழகத்தில் முகாமிட்டனர். நீண்ட தேடுதலுக்குப் பின்னர், கர்ணன் கடந்த ஜூன் மாதம் கோவையில் கைது செய்யப்பட்டு கொல்கத்தா அழைத்து செல்லப்பட்டார். கொல்கத்தாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்ட அவர் 6 மாத சிறை தண்டனை முடிந்து டிசம்பர் 20-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.
முன்னாள் கொல்கத்தா நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை முடித்து இன்று (வியாழக்கிழமை) தமிழகம் திரும்பினார்.
கொல்கத்தா சிறையில் இருந்து விடுதலையாகி 3 வாரங்கள் கழித்து, இன்று தனியார் விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளார் கர்ணன்.
source: dinasuvadu.com
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…