தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளபெருக்கு காரணமாக கேரளாவில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது.பல்வேறு மக்கள் வீடுகளையும் இழந்து உள்ளனர்.வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலர் பலியாகியுள்ளனர்.பலர் மாயமாகினர்.
மேலும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் 3 ஆயிரத்து 274 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.பின்னர் படிப்படியாக மக்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றனர்.
மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், அரசியல் தலைவர்களும்,சினிமா பிரபலங்களும் உதவி வருகின்றனர்.தற்போது கேரளாவில் மழை நின்று விட்டது.நிலைமை சீரணடைந்து வருகின்றது.
இந்நிலையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடகாவில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை: கம்பீர ஹீரோவாக இருந்த நடிகர் விஷாலின் சமீபத்திய தோற்றம், கை நடுக்கம் ஆகியவற்றை பார்த்த பலரும் “அச்சச்சோ என்னாச்சு…
சென்னை: அயலகத் தமிழர் தினத்தை முன்னிட்டு சென்னை சென்னை நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் ‘அயலகத் தமிழர் தினம்’…
சென்னை: 12 வருடங்களுக்கு பிறகு வெளியான சுந்தர்.சி - விஷாலின் 'மதகஜராஜா' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…
சென்னை : மதகஜராஜா திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 12-ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம்…
ராமேஸ்வரம்: தமிழ்நாட்டில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை…
டெல்லி: ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை ஒருங்கிணைக்கும் செயல்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், தற்பொழுது விண்கலன்களுக்கு இடையேயான தூரம் 15 மீட்டராக…