முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,நாட்டிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள முதல் மாநிலம் தமிழகம்தான் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கையின் போது உறுப்பினர்கள் நேற்று எழுப்பிய கேள்விக்கு இன்று பதில் அளித்தார். தமிழகத்தில் பொது ஒழுங்கை பராமரிப்பதில் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் குற்றங்களின் விகிதம் பிற மாநிலங்களோடு ஒப்பிடும்போது குறைவாக உள்ளதாகக் கூறிய அவர், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதிலும், நீதிமன்றத்தில் நிறுத்துவதிலும் காவல்துறையினர் சிறப்பாக செயல்படுவதாகக் கூறினார். குற்றவழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் விகிதமும் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களின் விகிதம் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் மிகக் குறைவாக உள்ளதாக தேசிய குற்ற ஆவண புள்ளிவிவரம் மூலம் தெரியவருவதாகவும் முதலமைச்சர் கூறினார்.
தொடர் கண்காணிப்புகள் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் ஊடுருவல் தமிழகத்தில் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மூளைச்சலைவை மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் தமிழக இளைஞர்கள் இணைவது தடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.
டெல்லி: நடிகை தீபிகா படுகோன் சினிமாவில் நடிப்பது மட்டும் இல்லாமல், பல்வேறு சமூக நிகழ்வுகள், சர்ச்சை பேச்சுகள், சில நேரங்களில்…
சென்னை : சட்டப்பேரவையின் 5-வது நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான சட்டதிருத்த…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் படுதோல்வியை சந்தித்திருந்த நிலையில், அடுத்ததாக கம்பேக் கொடுக்கும்…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்து காணப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.200 உயர்ந்திருக்கிறது.…
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றயை நிகழ்வுகளில் பங்கேற்க வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், 'இவன்தான் அந்த சார்' என அண்ணா…
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…