இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெருமிதத்துடன் கூறினார்.
கோவில்பட்டி,
நேற்று தமிழக அமைசர் இல்லதிருமண விழாவுக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பத்திரிக்கையாளரிடம் கூறியது..
இந்தியாவில் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து 5–வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது என்று கூறினார்.தொடர்ந்து அவர் கோரிய விவரம் வருமாறு …
இந்தியாவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையிலும் கடந்த 4 ஆண்டுகளாக தமிழகம் முதலிடத்தில் உள்ளது. நமது நாட்டில் உள்ள தலைசிறந்த மாநிலங்களில் 2–வது இடத்தை தமிழகம் பெற்றுள்ளது. இங்கு பல கட்டமைப்புகளும் ஒருங்கே அமைய பெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதால், இங்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படுவதால் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களில் உள்ள நிறைகுறைகளை சுற்றுலா துறை அலுவலர்கள் களஆய்வு செய்து, அந்த தகவல்களை அரசுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலையை பராமரிக்கவும், சீரமைக்கவும் இந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் ஓரிரு மாதங்களில் நிறைவடையும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை எந்த அளவு அதிகமாக உள்ளதோ, அந்த இடத்தில் சுற்றுலா துறை அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்படும். பின்னர் அங்கு சுற்றுலா பயணிகளுக்கு தேவையான தங்கும் வசதி, கழிப்பிட வசதி போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகின்றது.
குற்றாலத்தில் அருவிகளுக்கு செல்லும் வழியில் படிக்கட்டுகளை சீரமைப்பது, கைப்பிடி சுவர்கள் அமைப்பது, மின்விளக்குகள் அமைப்பது போன்ற அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. அங்கு சில குறைகள் இருந்தால், அவற்றை வருகிற நிதியாண்டில் சரி செய்வோம்.சுற்றுலா துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவு அடைந்தவுடன், அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள்தான் அதனை பராமரிக்கும் முழு பொறுப்பை ஏற்கின்றனர். அதனால் சுற்றுலா தலங்களில் சுற்றுலா துறை கட்டணம் வசூலிக்கிறது, டெண்டர் விடுகிறது என்று கூறுவது தவறானது.
இவ்வாறு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
DINASUVADU