தமிழகத்தை மாற்ற வருகிறது பயோ – பிளாஸ்டிக்..!

Default Image

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், கோவையில் அறிமுகப்படுத்தப்பட்ட எளிதில் மக்கும் பயோ பிளாஸ்டிக் பைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகாரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால் மண்வளமும், அதனை எரிக்கும் போது காற்றும் கடுமையாக மாசடைகிறது. நிலத்தில் வீசப்படும் பிளாஸ்டிக் பைகள் மழை நீரை நிலத்துக்குள் செல்லவிடாமல் தடுத்து விடுவதால் நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுகின்றது.

 

ஒரு பிளாஸ்டிக் பை மண்ணில் புதைந்து மக்குவதற்கு 500 முதல் 1000 வருடங்கள் ஆகும் என்கிறது ஒரு ஆய்வின் அதிர்ச்சி தகவல். பிளாஸ்டிக் பயன்பாடு என்பது தற்போதைய சூழலில் அத்தியாவசிய தேவை என்றாகி விட்டாலும் கூட அதன் ஆபத்து தலைமுறை கடந்தும் நீடிக்கும் என்ற அச்சத்தில் தான் பிளாஸ்டிக்கிற்கு வருகிற ஜனவரி 1 ஆம் தேதி முதல் நிரந்தர தடையை விதித்துள்ளது தமிழக அரசு..!

பிளாஸ்டிக் தடையால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழப்பார்கள் என்றும் ஏராளமான குடும்பங்களின் வாழவாதரம் பாதிக்கப்படும் என்றும் கவலை தெரிவித்திருந்தனர்.

 

இந்த நிலையில் எளிதில் மக்கும் தன்மை கொண்ட பயோ பிளாஸ்டிக் பைகளை அறிமுகப்படுத்தி பிளாஸ்டிக்கிற்கான தடையால் அதிர்ந்து கிடந்த வியாபாரிகளுக்கு மாற்று வழியை ஏற்படுத்தி இருக்கிறார் கோவையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் சிபி..!

அமெரிக்காவில் இருந்து தான் கண்ட பயோ பிளாஸ்டிக் பைகளின் தொழில் நுட்பத்தை இங்கு செயல்படுத்தி உள்ளார் சிபி..! எரித்தால் காகிதத்தை போல சாம்பலாகிவிடுவ்தையும், சுடு தண்ணீரில் போட்டு கலக்கியதும் அந்த பை சிதிலம் அடையும் காட்சிகளையும் அவர் விளக்கி காட்டினார்

 

பிளாஸ்டிக்கை எரிக்கும் போது புற்று நோயை உண்டாக்கும் கார்பன் மோனாக்சைடு என்ற  நச்சு வாயு, பயோ பிளாஸ்டிக்கை எரிக்கும் போது உருவாவதில்லை. இந்த பயோ பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் தன்மை கொண்டவை என்பதை பல்வேறு சோதனைகள் மூலம் உறுதிபடுத்திக் கொண்டதால் கோவை மாநகராட்சி இதனை பொதுமக்களுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கிறார் மாநகராட்சி ஆணையர் விஜய் கார்த்திகேயன்

மரவள்ளி கிழங்கு, காய்கறி மற்றும் உணவு கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பயோ பிளாஸ்டிக் பைகள் வழக்கமான மக்காத குப்பையான பிளாஸ்டிக்கைவிட 2 மடங்கு விலை என்பதால் தற்போது கோவை மக்கள் அதிகம் பயன்படுத்த தயங்குவதாக கூறப்படுகின்றது.

 

மக்கள் அதிகமாக பயன்படுத்த தொடங்கும் போது, இந்த பயோ பிளாஸ்டிக் பைகளின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது. பிளாஸ்டிக் பைகளுக்கு 100 சதவீதம் மாற்றாக வந்துள்ள பயோ பிளாஸ்டிக்கை பயன் படுத்தினால் அது மண்னுக்கு நல்ல உரமாகும் என்பதே இதன் கூடுதல் சிறப்பு..!

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்