தமிழகத்தை பற்றி அவரு சரியாதான் சொல்லிருப்பாரு…!இவருக்கு மொழி பெயர்க்க தெரியாது..!அமைச்சர் ஜெயக்குமார்
ஹெச் .ராஜா , மொழி பெயர்ப்பில் தவறு நடந்திருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நேற்று அமித் ஷா சென்னை வந்தார். தமிழக அரசியல் விவகார குழுவை சேர்ந்த 16பேரிடம் 39நாடாளுமன்ற தொகுதிகள் பற்றி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.இதில் தமிழிசை,முரளிதரராவ்,பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அமித் ஷா கூட்டம் முடிந்தவுடன் பேச ஆரம்பித்தார்.அவர் ஹிந்தியில் பேசினார்.இதை பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.
இதில் அமித் ஷா சொட்டு நீர் பாசனத்திற்கு நிதி ஒதுக்கியது தொடர்பாக பேசினார்.இதை மொழி பெயர்த்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சொட்டு நீருக்கு பதிலாக சிறுநீர் பாசனம் என்று தவறாக தெரிவித்துவிட்டர்.மேலும் , நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது.ஓட்டுக்கு நோட்டு என்ற நிலையிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டிய பொறுப்பு பாஜகவினருக்கு உண்டு என்று அமித்ஷா கூறியதை ஹெச் .ராஜா மொழி பெயர்த்தார்.
இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழக அரசை பற்றி அமித்ஷா நன்றாகத்தான் கூறியிருப்பார், மொழி பெயர்ப்பில் தவறு நடந்திருக்கும் என நான் நம்புகிறேன் என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.