தமிழகத்தை காவிரி விவகாரத்தில் எதிர்ப்பு என்ற பெயரில் நிலைகுலையச் செய்ய சூழ்ச்சி…!பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்

Published by
Venu

பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் காவிரி விவகாரத்தில் எதிர்ப்பு என்ற பெயரில் தமிழக்தை நிலைகுலையைச் செய்யும் சூழ்ச்சியை திமுக உள்ளிட்ட கட்சிகள் எடுத்துக் செல்வதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”காவிரி பிரச்சினையில் ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் சுயநலத்தோடுதான் நடந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாடறியும். பிரதமர் மோடியின் செல்வாக்கு மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் போராடும் திரைப்பட துறையினர், கடந்த காலங்களில் தமிழகத்தில் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு எத்தனை முறை திரை அரங்கங்களை மூடினார்கள். எத்தனை முறை திரைப்படங்களை நிறுத்தினார்கள்.

தமிழகத்திற்கு எந்தவித வளர்ச்சி திட்டங்களும் வந்துவிடக் கூடாது என்ற குறுகிய எண்ணத்துடன் செயல்படும் சில தமிழர் விரோத சக்திகளின் கைகளில்தான் இந்தப் போராட்டங்கள் இயங்குகின்றன. இவர்களை தமிழக அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கவிட்டால் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்க முடியாது, விவசாயிகள், விவசாயம் என்று கூக்குரலிடும் இவர்கள் கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு என்ன நன்மை செய்திருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

காவிரி விவகாரத்தில் எதிர்ப்பு என்ற பெயரில் தமிழக்தை நிலைகுலையைச் செய்யும் ஒரு மிகப்பெரிய சூழ்ச்சியை திமுக உள்ளிட்ட கட்சிகள் எடுத்துக் செல்கின்றன. கருப்புக் கொடி காட்டுவதிலும் ஒரு கண்ணியமும், நாகரிகமும், பண்பாடும் இருக்க வேண்டும் இதை மீறி எல்லை தாண்டி நடந்து கொள்ளும் இவர்களை தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

“ஹிந்தி தேசிய மொழி இல்லை…அஸ்வின் சொன்னது சரி தான்” – அண்ணாமலை!

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் ஜனவரி 9-ஆம்…

2 minutes ago

கிடைத்தது முக்கிய அங்கீகாரம்… இனி நாம் தமிழர் கட்சியும் ஒரு மாநில கட்சி!

சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…

9 hours ago

த.வெ.க மாவட்ட செயலாளர்கள் நியமன குழப்பம்! அடுத்தடுத்த நகர்வுகள் என்ன?

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…

9 hours ago

இஸ்ரோ வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! நாளை விண்ணில் ‘மிக’ முக்கிய நிகழ்வு!

டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…

11 hours ago

சட்டப்பேரவையில் காரசார விவாதம்.. ஈபிஎஸ்க்கு சவால் விடுத்த மு.க ஸ்டாலின்!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…

11 hours ago

“சீமான் கருத்துக்கள் பதற்றத்தை ஏற்படுத்துகிறது!” உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…

12 hours ago