தமிழகத்துக்கு துணை நிற்போம்…கேரள அரசு ஆதரவு…!!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு துணை நிற்போம் என கேரள அரசு ட்வீட் செய்து அறிவித்துள்ளது.
கஜா புயலால், நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் சேதங்களை சத்தித்துள்ளன. அப்பகுதிகளில் தமிழக அரசு தீவிர மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளது.இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு துணை நிற்போம் என்று கேரள அரசு தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.குடிநீர், போர்வைகள், மெழுகுவர்த்திகள், உணவுப் பொருட்கள் மற்றும் மக்கள் அணிந்துகொள்ள புதுத் துணிகளும், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை கேரள பேரிடர் மீட்புக் குழு ஒருங்கிணைக்கும் என்றும் ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
dinasuvadu.com