தமிழகத்தில் 5,69,578 பேர் கைது.! ரூ.9,53,53,424 அபராதம் வசூல்.!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,40,843 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 4,40,843 வாகனங்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 5,69,578 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, ஊரடங்கை மீறியதாக இதுவரை 5,32,401 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.9,53,53,424 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.