தமிழகத்தில் 4,690 தேர்தல் வழக்குகள் பதிவு
கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தமிழகம் முழுவதிலும் மிக விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தேர்தலை முன்னிட்டுதேர்தல் ஆணையம் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தாலும், பல விதிமீறல்கள் நடைபெற்று தான் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் 4,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் வேலூர் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. .