தமிழகத்தில் 3 பல்கலைக்களத்திற்கு மட்டும் அங்கிகாரம்: தொலைநிலை கல்வி விவகாரத்தில் யு.ஜி.சி…, அதிரடி
பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்வி பட்டியலில் தமிழகத்தில் 3 பல்கலைக்கழகத்திற்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயர்கல்வி தரத்தை கண்காணிக்க, மேம்படுத்த மத்திய அரசின் மனிதவளதுறையின் கீழ் பல்கலைக்கழக மானியக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழு உயர்கல்வி மற்றும் எம்.பில்., பி.எச்.டி., உள்ளிட்ட ஆய்வு படிப்புக்கான தகுதிகள், விதிமுறைகள், அங்கீகாரம் உள்ளிட்ட வரைமுறைகள் அளிக்கப்பட்டது. அணைத்து பல்கலைக்கழகங்களும் மாநிலம் கடந்து, நாடுகள் கடந்து தொலைக்கல்வியை வழங்கி வந்தன.
யு.சி.ஜி கட்டுப்பாடு:
- பட்டப்படிப்பு விற்பனை செய்யப்படுவதாகவும், உரிய முறையில் தேர்வு நடத்தப்படாமல் சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- மாநிலம் மட்டும் எல்லைக்குட்பட்டு மட்டுமே தொலைக்கல்வி வழங்க வேண்டும்.
- வழங்கப்படும் பாடங்களுக்கு உரிய அங்கீகாரம் பெற வேண்டும். உள்ளிட்ட விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளை பல்கலைக்கழகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. இதனை பின்பற்றவும் இல்லை.
3 பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே அங்கீகாரம்:
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே தொலைதூரக்கல்வி வழங்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் போலி பல்கலைகழக பட்டியலை வெளியிட்டது.