தமிழகத்தில்,16 மாவட்டங்களில் மட்டுமே 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் மத்திய அரசு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு பகுதிகள் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் கடந்த ஜூன் 5-ம் தேதி வரை கட்டுப்படுத்தப்பட்டு பகுதி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் , தமிழகத்தில், 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை எனவும், 16 மாவட்டங்களில் மட்டுமே 316 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழக அரசு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட வாரியான விவரங்களை அரசாணையாக வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில்,நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில், கடந்த 9 நாட்களாக 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை 33,229 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…