தமிழகத்தில் வாங்கிய முதல் ரோபோட்..! ஏன்? எதற்கு?என்ன லாபம்..!
தமிழகத்தில் முதன்முறை; கும்பகோணத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்புகளை சீரமைக்க ரோபோட் இயந்திரம்: நகராட்சி நிர்வாக ஆணையர் தொடங்கி வைத்தார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நகராட்சியில் 2008-09 ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாதாள சாக்கடை திட்டம் பலமுறை தோல்வி அடைந்தது மேலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானதுஇதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள் மற்றும் 125.71 கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் உள்ளது.
துப்புரவு ஊழியர்களுக்கு பாதுகாப்பாற்ற சூழ்நிலை உள்ளது என்பதைமனதில் கொண்டுஇந்த இயந்திரம் வாங்கப்பட்டது என்றும் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளைத் தவிர்க்கவும் இது பயன்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த விமல் கோபிநாத் குழுவினர் உருவாக்கியுள்ள ரோபோட் மூலம் சுத்தம் செய்யலாம்.விலை 9 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். இவற்றை கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதிப்குமார், வாங்கி கும்பகோணம் நகராட்சிக்கு வழங்கியுள்ளார்.