தமிழகத்தில் ரதயாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தி.மு.க எம்எல்.ஏ-க்கள் அமளி!
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க 500க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே ரத யாத்திரை நுழைவதைத் தடுப்போம் என அறிவித்த கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா,, வேல்முருகன் உள்ளிட்டோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரத யாத்திரைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்ற போது கைது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.செங்கோட்டை அருகே பாறைப்பட்டி என்ற பகுதியில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
தென்காசி அருகே செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் சிலை அருகே ராம ரத யாத்திரைக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ரதயாத்திரைக்கு தமிழகத்தில் தடை விதிக்க வலியுறுத்தி சட்டப்பேரவையில் தி.மு.க எம்எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ரத யாத்திரையை அனுமதித்தது ஏன்?என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.இந்நிலையில் தொடர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுகவினர் வெளியேற்றப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.