தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18 ஆயிரத்து 524 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பிப்பு!
உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,தமிழகத்தில் பொறியியல் சேர்க்கைக்கு கடந்த ஆண்டை விட இந்தாண்டு 18 ஆயிரத்து 524 மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர் என கூறியுள்ளார்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், திருநெல்வேலி, மதுரை, கோவை ஆகிய மூன்று பொறியியல் கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் படிப்பதற்கான இடங்களை அரசு ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.