தமிழகம்:மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று முதல் ஆய்வு செய்யவுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்,தமிழகத்தில் அவ்வப்போது மிக கனமழை பெய்து வருகிறது.இதன் காரணமா,சென்னை, காஞ்சிபுரம், கடலூர் திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இதனையடுத்து,பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம்,ரூ.2,629 கோடி ரூபாய் நிவாரண நிதி கேட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து,மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழுவினர் சென்னைக்கு நேற்று வருகை புரிந்தனர்.இக்குழுவில் விவசாயம்,நிதி,நீர்வளம், மின்சாரம், போக்குவரத்து,ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து,மத்திய குழுவினர் தமிழக தலைமை செயலாளர் இறையன்புவை நேற்று மாலை சந்தித்து மழை பாதிப்பினை ஆய்வு செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.அதன்பிறகு,ரிப்பன் மாளிகைக்கு மத்திய குழுவினர் சென்று,அங்கு மழை பாதிப்புகள் தொடர்பாக வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இந்நிலையில்,மத்திய உள்துறை இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான மத்தியக் குழுவினர் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தமிழகத்தில் மழையினால் ஏற்பட்ட சேதங்களை இன்று ஆய்வு செய்யவுள்ளனர்.அதன்படி,காலை 9 மணி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு குழுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மற்றொரு குழுவும் ஆய்வு செய்ய உள்ளது.
இதனைத் தொடர்ந்து,நாளை (23 ஆம் தேதி) கடலூர்,மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்தியக் குழு ஆய்வு செய்யவுள்ளது.மேலும், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு குழுவும்,வேலூர் மற்றும் ராணிப்பேட்டையில் மற்றொரு குழுவும் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இதனையடுத்து,வருகின்ற 24 ஆம் தேதி இக்குழுவினர் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு டெல்லிக்கு புறப்பட்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…