தமிழகத்தில் நீட்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்கள்!

Default Image

இன்று நடப்பாண்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும்,தமிழகத்தில் 23 அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர 2 ஆயிரத்து 593 இடங்களுக்கும், 10 சுயநிதிக் கல்லூரிகளில் உள்ள 784 இடங்களுக்கும், 11 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 20 இடங்களுக்கும் சேருவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 43 ஆயிரத்து 935 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வந்துள்ளன.

இந்நிலையில்  எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

சென்னையை சேர்ந்த மாணவி கீர்த்தனா 676 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ள்ளார். 2-ம் இடம் ராஜ் செந்தூர், 3-ம் இடம் பிரவின் பெற்றுள்ளனர்.

இதன் பின்னர் பேசிய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ படிப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ படிப்புக்கு விண்ணப்பித்த ஒரு திருநங்கையின் விண்ணப்பம் ஏற்க்கப்பட்டுள்ளது. மருத்துவ படிப்பிற்கான கல்விக் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்றும் மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 முதல் 10-ம் தேதி வரை நடைபெறும். தமிழ்நாட்டில் 3,393 மருத்துவ இடங்கள் உள்ளன, பல் மருத்துவ படிப்பில் 1,198 இடங்கள் உள்ளன என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தற்போது  தமிழகத்தில் நீட்தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் 20 மாணவர்கள் பெற்றுள்ளனர். 501-599 வரை 188 மாணவர்களும், 451-500 வரை 306 மாணவர்களும், 401-450 வரை 750 மாணவர்களும், 351-400 வரை 1,308 மாணவர்களும் 301-350 வரை 2,158 மாணவர்களும் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்