மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன், தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் என தெரிவித்தார்.
ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன் பெசன்ட்நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :விவசாயிகளுக்கு ஆதரவாக ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். காவிரிக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும். எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தமிழக அரசு அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தகுதியான ஆட்கள் தமிழகத்தில் இல்லையா? தமிழகத்தில் செயற்பட்டுவருகிற ஓர் அரசின் பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தினை சேர்ந்த நபர் ஒருவரை துணை வேந்தராக நியமிப்பது எந்த ரீதியிலும் சரியானது அல்ல. அதுவும், காவிரி பிரச்சனை தகிக்கிற சூழலில் ஆளுநரின் இத்தகைய செயல்கள் தேவையற்ற விளைவுகளை உண்டாக்கும்.
ஆட்சியில் இருந்தால் மட்டும் போதும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியல்ல, கவர்னர் ஆட்சிதான்” என்று தினகரன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…
HMPV வைரஸ் கொரோனா அளவிற்கு ஆபத்தானதா என்றும் இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்றும் இந்த செய்தி குறிப்பில் காணலாம்.…
சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புகளை விரைந்து வழங்க ஏதுவாக நாளை (ஜனவரி 10) அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும். தமிழர்…
துபாய்: நடிகர் அஜித்தின் வரவிருக்கும் படமான குட் பேட் அக்லி ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கிடையில்,…