தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் ….!

Default Image

ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன், தமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான் என  தெரிவித்தார்.

ஆர்கே நகர் தொகுதி எம்எல்ஏவான டிடிவி தினகரன் பெசன்ட்நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது :விவசாயிகளுக்கு ஆதரவாக ஐபிஎல் போட்டியை இளைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். காவிரிக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும். எதிர்க்கட்சிகள் போராட்டத்தை தமிழக அரசு அடக்குமுறை மூலம் ஒடுக்க நினைக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக தகுதியான ஆட்கள் தமிழகத்தில் இல்லையா? தமிழகத்தில் செயற்பட்டுவருகிற ஓர் அரசின் பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகத்தினை சேர்ந்த நபர் ஒருவரை துணை வேந்தராக நியமிப்பது எந்த ரீதியிலும் சரியானது அல்ல. அதுவும், காவிரி பிரச்சனை தகிக்கிற சூழலில் ஆளுநரின் இத்தகைய செயல்கள் தேவையற்ற விளைவுகளை உண்டாக்கும்.

ஆட்சியில் இருந்தால் மட்டும் போதும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நினைக்கிறார். தமிழகத்தில் நடப்பது எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியல்ல, கவர்னர் ஆட்சிதான்” என்று தினகரன் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்