தமிழகத்தில் தனியார் பள்ளிகள் புத்தகங்களை வழங்காமல், மாணவர் மற்றும் பெற்றோரை அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

Default Image

தமிழகத்தில் உள்ள சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை மட்டும் வசூலித்து விட்டு புத்தகங்களை வழங்காததால், மாணவர் மற்றும் பெற்றோர் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு இந்த ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. தனியார் பள்ளிகள் புத்தகங்களுக்கான பணத்தை செலுத்தி அவற்றை வாங்கிக் கொள்வது வழக்கம். www.textbookonline.tn.nic.in இணையதளம் மூலமாகவும் மொத்தமாக ஆர்டர் செய்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்து இருந்தது. 12 ஆயிரத்து 133 தனியார் பள்ளிகளில், இன்னும் 2 ஆயிரத்து 169 பள்ளிகள் புத்தகங்களுக்கான ஆர்டர் கொடுக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் அன்றாட பாடம் படிக்க முடியாமல் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். ஒரு சில மாணவர்கள் இணையதளத்தில் pdf வடிவில் கிடைக்கக் கூடிய இ-புத்தகங்களை தரவிறக்கம் செய்து படித்து வருவதாகவும், ஆசிரியர்களும் இ-புத்தகங்களையே பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த புத்தகங்களை வெளியில் எங்கும் வாங்க முடியாது என்பதால், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரும், மாணவர்களும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள DPI வளாகத்தில் வந்து வாங்கிச் செல்லும் நிலை நிலவுகிறது. தினந்தோறும் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றோரும், மாணவர்களும் அவதி அடைகின்றனர்.

மாணவர்கள் பலரும் சீருடையுடன் வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களை சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளே அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களுக்கு புத்தகங்களை வழங்காமல் கல்விக் கட்டணத்தை மட்டும் வாங்கிக் கொண்டுள்ள தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கேட்டுக் கொண்டுள்ளனர். அதிக பாடத்திட்டம் உள்ள காரணத்தால் பள்ளி வேலை நாட்கள் 10 நாட்கள் அதிகரித்துள்ள போதும், பள்ளி திறந்து 20 நாட்களாகியும் புத்தகம் வழங்காமல் இருப்பது பெற்றோர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence
game changer shankar
gold price
TNAssembly